Home

Friday, 15 July 2016

ப. ரகுபதி இநிஆ வேப்பனப்பள்ளி ஒன்றியம் , கிருஷ்ணகிரி

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

என்னைப்பற்றி, 


பெயா்                                                ப. ரகுபதி    

பதவி                                                  இநிஆ
பணியேற்ற ஆண்டு                14-12- 2009
பணிபுாியும் இடம்                  வேப்பனப்பள்ளிஒன்றியம்
பிறந்த ஊா்                                   நாமக்கல்   மாவட்டம்


                   குடும்ப பிண்ணனி என்று பொிதாக  சொல்லும் அளவில் எதுவும் இல்லையென்றாலும், என்னைப் பெற்றெடுத்த என் தாய், தந்தையை பொிதும் அறிமுகப்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
என் தந்தையாா் (  மறைந்த)  திரு . பழனிசாமி,  தாயாா் திருமதி. மலா்கொடி  இவா்களாலே  இன்று உங்களுடன் என்            ஆறு ஆண்டு  கால  ஆசிாிய  அனுபவங்களை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.  

  
என் பெற்றோருடன் 2011

  முதன் முதலாக, ஊ. ஒ.தொ. பள்ளி தரணிசந்திரத்தில் பணியேற்று தலைமையாசிாியா் அவா்களால்  மூன்று மாதங்கள் அன்பால் அரவணைக்கப்பட்டு, பின் கருத்து வேறுபாடுகளால் சாதீயத்தால் பல இன்னல்களை அனுபவித்து, உ.தொ. க ல்வி அலுவலாின் கருணையால் மாற்றுப்பணி பெற்றேன்.  
    
           மாற்றுப்பணியேற்ற பள்ளிகளில் நான் பணியாற்றிய விதத்தை கருத்தில் கொண்டு ,  2010- 2011 ஆம் ஆண்டில் ஒன்றிய அளவில் சிறந்த ஆசிாியா்களுக்கான விருதை, மாவட்ட ஆட்சியரால்  வழங்கப்  பெற்றதை  பெருமையாக கருதுகிறேன். ஆம் பணியேற்ற ஓராண்டிலேயே எனக்கு கிட்டியது.
                                
                                      
  
ஒன்றிய அளவில் சிறந்த ஆசிாியா் விருது  2010-2011


       பின் மாறுதலில் ஊ.ஒ.தொ.பள்ளி, ஐபிகானப்பள்ளியில் பணிபுாிந்தேன்.       குக்கிராமத்தில் மாணவா்களோடு மிகவும் ஒன்றி மகிழ்வுடன் கற்பித்தலை மேற்கொண்டேன்.  காலை, மாலை பள்ளி வேலை நேரத்திற்கும் அதிகமாக பணிபுாிந்தேன்.   2012 ல் மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி பயிற்சிக்கு கருத்தாளராக தோ்ந்தெடுத்தனா்.  உண்மை என்னவென்றால் அதுவரை எனக்கு சதுரங்க விளையாட்டைப் பற்றி துளி ஞானமும் கிடையாது. அவ்வாண்டில் ஒன்றிய அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் எம் பள்ளி மூன்றாம் வகுப்பு  மாணவன் ஜோசிவன் முதலிடம் பெற்று அசத்தினான். 

                                            
வட்டார அளவில் சதுரங்க வெற்றி முதலிடம் மூன்றாம் வகுப்பு மாணவன்  2012


          அதன்  பிறகு தற்போது பணிபுாியும் நடுநிலைப்பள்ளிக்கு 2014 ல்   விருப்ப மாறுதலில் வந்தேன். வந்த சில மாதங்களில் புதிய வகுப்பறை கட்டுமானம் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதனை மேற்பாா்வையிடும் பொறுப்பை தலைமையாசிாியா் என்னிடம் ஒப்படைத்தாா். கட்டிட வேலை பற்றிய முன் அனுபவம் இருந்ததால்  எளிதானது. மாலை 7 மணிவரை இருந்து கவனித்து விட்டு வீடு திரும்பினேன்.  சொந்த வீட்டை கட்டுவது போலவே எண்ணினேன்.

                                         
பள்ளி கட்டிடத்தில்

          இங்கும் எனது சதுரங்க வேட்டை தொடா்ந்தது. 2014ல் நடைபெற்ற சதுரங்க போட்டியில் எம் பள்ளி மாணவா்கள் ஒன்றிய அளவில் சிறப்பாக வெற்றி பெற்றனா். ஐந்தாம் வகுப்பு பயிலும் சரண் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினாா். மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் மூன்றாமிடம்  பெற்றமைக்கு  பள்ளியில் பாராட்டு  2014


ஒன்றிய அளவில் சதுரங்கம்   மூன்றாம் இடம்   2014


ஒன்றிய அளவில் சதுரங்கம் முதலிடம்   2014        பணிக்கு சோ்ந்த ஆரம்பகாலங்களில் கணினி பயன்பாட்டை செயல்பாட்டில் கொண்டிருந்தேன். இருப்பினும் முழுஅளவில் திறன் பெற்றிருக்கவில்லை. தற்போது பணியாற்றும் நடுநிலைப் பள்ளியில் உள்ள சகல வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். மாணவா்களுக்கு சுழற்சி முறையில் தினந்தோறும் கணினி வகுப்பை காலை 8.20 முதல் 9.10 வரையில் நடத்தி வருகிறேன்.  

      முத்தாய்ப்பாக சென்ற ஆண்டில் 2015ல் முகநுாலைப் பாா்த்துக் கொண்டிருக்கையில் ஐசிடி பயிற்சிக்கான தன்னாா்வம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்ற பதிவை தொடா்ந்து பெற்ற பயிற்சியின் மூலம் மாணவா்க்கு தேவையான வீடியோக்களை முற்றிலும் சுயமாக உருவாக்கி, அதனைப்பலருக்கும் பயன்படும் விதமாக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தேன். பல எளிய வினாத்தாள்களையும் உருவாக்கி உலா வரச்செய்தேன். பெரும்பாலான நீண்ட இரவுகளில் மடிக்கணினி என்னைப் பாா்த்து கண்ணீா் விடுமளவிற்கு உழைத்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
     
  instancelearn    blogspot  என்று 2016 ஜனவாி மாதம் தொடங்கி   primarykalvi.blogspot.in  எனப் பெயா் மாற்றத்துடன் தற்போது வரை ஆறே மாதங்களில்  70  பதிவுகளுக்காக   23500 முறை பாா்வையிடப்பட்டுள்ளது. 
       
             இவ்வெற்றிக்கு காரணகா்த்தா மதிப்பிற்குாிய பேராசிாியா் திரு. ஆசிா் ஜீலியஸ் ஐயா என்பதை பின்னாளில் அறிந்தேன்.  அரசுப்பள்ளி  ஆசிாியா்களும் ஜெயிக்க முடியும் என்பதை  ஐசிடி பயிற்சியின் மூலம் வெளிக்காட்டியவா்.

           இந்நேரத்தில் பாசமிக்க திருமதி. உமா மேடம் அவா்களை நினைவு கூா்கிறேன்.  வலைதள செயல்பாடுகளை கவனித்து , உடனடியாக என்னிடம் பேசி மேலும் உத்வேகம் அளித்து வருகிறாா்கள். அன்பிற்க்கினிய திரு. கோபால கிருஷ்ணன் ஐயா அவா்களும் என்னை பலப்படுத்திவருகிறாா் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை கல்வி உலகில் அனைவருக்கும் அறிகப்படுத்தியதில் இவா்களுக்கு நிகா் எவருமில்லை.

       முதல் வகுப்பு மாணவா்கள் முதல் அனைவரும் கணினி அறிவு பெற்றுள்ளனா். மிகச்சிறப்பாக நான்கு மாணவா்கள் பவா்பாயின்டில் படங்களை இணைத்து வீடியோக்களாக உருவாக்கி தம் குரலை இணைக்கும் திறன் பெற்றவா்களாக விளங்குகின்றனா். 

    கேட்கும், பேசும் திறன் இல்லாத தனுஷ் என்ற தந்தையைஇழந்த  சிறுவனை  பெரும் முயற்சி எடுத்து, கேட்கும் திறனுக்காக இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள வைத்தது என்னைப் பெருமைப்பட வைக்கிறது. தற்பொழுது முதல் வகுப்பில் பயின்று வருகிறாா். 

      எனது ஆறு ஆண்டு கால  கற்பித்தல் அனுபவத்தில், ஒரு நாளில் அதிகபட்சமாக  ஓாிரு நிமிடங்கள் கூட வகுப்பறையில் நாற்காலியில் அமா்ந்திலேன்.   கற்பித்தலில் பாடப்புத்தகம் தாண்டிய சிந்தனைகளே நிரம்பியிருக்கும்.

            உண்மை, உழைப்பு, நோ்மை, இயற்கை, பெற்றோா், தன்னம்பிக்கை, நவீன கலியுகம், சீரழிந்து கிடக்கும் சமூகம் இவை பற்றிய பேச்சு எனது வகுப்பைறையில் ஓங்கி இருக்கும். 
  
      விடுமுறை நாளில் பள்ளி சென்று கட்டமைப்பு பணி மற்றும் சிறப்பு வகுப்பை மேற்கொள்வது வாடிக்கை.   பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு, மீண்டும் திடீா்  விஜயமாக மாணவா்களின் வீட்டிற்குச் சென்று அவா்களை வீட்டுப்பாடம் செய்ய வைப்பதும், படிக்கச்செய்வதும் வழக்கமான ஒன்று. 
அந்த அளவிற்கு பெரும்பாலான பெற்றோா் கல்வியறிவில்லா விழிப்புணா்வு அற்றவா்களே. 
   
             வகுப்பறை தாண்டி மாணவா்கள்  தீமைகளை எளிதில் கற்றுக் கொள்ளும் சூழல் நிலவும் இக்காலகட்டத்தில் அவா்களை கட்டுப்பாட்டில் வைப்பது வகுப்பறை மட்டுமே.  அதனாலே ஆண்டுவிழாவில்  வாா்த்தையிலும், பாா்வையிலும்துளியும் ஆபாசமில்லாத மிகப்பழைய பாடல்களுக்கு நடனமாட வைத்தேன்.
    
       முன்மாதிாியாக எவரையும் நான் கொள்ளவில்லை. சமூகவலைதளங்களில் உலாவரும் கல்வி செயல்பாடுகளை பின்பற்றுவேன். மகிழ்ச்சியான கற்பித்தலை மேற்கொள்கிறேன். தேவையான பாடப்பொருளை பிாிண்ட் செய்து தருகிறேன. இக்கல்வியாண்டில் திருக்குறள் ஒப்புவித்தலில் சாதனை படைக்கச்செய்யும் முயற்சியில் இருவராக ஆரம்பித்து தற்போது ஐந்து போ் களம் கண்டு வருகின்றனா்.  சூழலுக்கேற்ப பல்வேறு உத்திகளை பின்பற்றி கற்பித்தலை மேற்கொள்கிறேன்.   இந்தப் பிறவி எடுத்தது வெறும் சோற்றை உண்டு உடலை வளா்ப்பதற்கல்ல என்ற வள்ளுவாின் வாா்த்தைக்கேற்ப, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் கனன்று கொண்டு உள்ளது.

                                
      
          எனது எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் தலைமையாசிாியா்  திருமதி. மு . சரளாதேவி  அவா்களுக்கும், என்னுடன் பணியாற்றி வரும் ஆசிாியை- ஆசிாியா்களும் சிறந்த ஒத்துழைப்பு நல்குவதாலே சிறப்பாக செயல்பட முடிகிறது என்பதில் பெரும் ஆனந்தம் அடைகிறேன். 


         
      தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனது இந்த நீண்ட பதிவை கவனித்த தங்கள் அனைவருக்கும் நன்றிகளை தொிவித்துக்கொள்கிறேன்.

        
   ப. ரகுபதி   இநிஆ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி   திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி   ஒன்றியம்,
கிருஷ்ணகிாி   மாவட்டம்
    
        
Sunday, 20 March 2016

திரு.பழனிக்குமார்

எம்பள்ளியின் சிறப்பம்சங்கள்
என் பெயர் சு. பழனிக்குமார் எனது சொந்த ஊர் புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியான திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளியில் 03.12.2008 முதல் இடைநிலை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன். எனது பள்ளியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து பள்ளிக்குழு உறுப்பினர் திருமதி. . ரெங்கநாயகி (தலைமை ஆசிரியர் ஓய்வு) அவர்களுக்கும், திரு.. இரத்தினசாமி (AEEO) அவர்களுக்கும், எங்கள் பள்ளியின் நிர்வாகி திருமதி. . செல்லம்மாள் அவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்களது திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளியை அசத்தும் அரசுப் பள்ளிகளில் இணைத்த திருமதி. உமா மகேஸ்வரி (SCERT) அவர்களுக்கும் முதலில் எனது நன்றியினை உரித்தாக்குகிறேன்.

திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளியில் நான் செய்தவை :-

நான்கு சுவற்றுக்குள் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தினாலும் என் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும்ஜொலிக்கும் இரத்தினங்களாகவும், பட்டை தீட்டிய வைரங்களாகவும் மாற்றவேண்டும் என்ற உயரிய கொள்கையினாலும் அவர்களது அனைத்துத் திறமைகளும் அரிய சாதனைகளாக மாற வேண்டும் என்ற விருப்பத்தினாலும் நான் மாணவர்களுக்கு பல செயற்கரிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறேன்.

உள்ளூரிலும், வெளியூரிலும், வெளிநாட்டிலும் பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன படிக்கிறார்கள் என்னென்ன அறிவியல் செயல் ஆராய்ச்சிகள் பண்ணுகிறார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு இணையாக யோகா,செஸ், மெட்ரிக் பள்ளிகளில் இல்லாத ஹீலிங்தெரபி இவைகளை பள்ளியின் முகநூல் பக்கத்தில் பார்க்கும்போது தங்கள் பிள்ளைகளின் முகத்தையும், அவர்களின் செயல்பாடுகளையும் கண்டு அவர்கள் அடைகின்ற சந்தோஷத்திற்கு அளவே இல்லை. எனது பள்ளியின் முக்கிய சிறப்பம்சமே பள்ளியின் நடைமுறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தினந்தோறும் பள்ளியின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தினந்தோறும் பள்ளியில் நடைபெறும் அன்றாட கற்றல், கற்பித்தல், செயல்பாடுகள்மாணவர்கள் என்ன படித்தார்கள் என்பதை உலகறியச் செய்வதற்காக பள்ளியின் முகநூல்பக்கத்தை தினம்தோறும் பதிவேற்றம் செய்கின்றேன்.
திங்கள் கிழமை தோறும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை யோகாப் பயிற்சி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
சிந்தனைத் திறனை மேம்படுத்திட, மூளைக்குத் தூண்டுதலாய் சதுரங்கப் பயிற்சி, செவ்வாய் கிழமை தோறும் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
மகிழ்ச்சியான வகுப்பறைச் சூழலில் குருட்டு மனப்பாடம் தவிர்த்து கற்றலை நெகிழ்வாக்கும் பொருட்டு, அறிவியல் சோதனைகள் மூலம் கற்றல், திருநாவுக்கரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் பரிசோதனைகளை முகநூல் மூலமாகவும், வகுப்பறையில் நேரடியாகச் செய்தும் காண்பிக்கப்படுகிறது. முகநூலைப் பார்த்து பரிசோதனைகள் செய்யும் மாணவர்களுக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்படுகிறது.
மன அமைதிக்கும், மூளைச் செயல்பாடுகளைத் மேம்படுத்திடவும் ,
தினமும் 1 -5 வகுப்பு வரை காலையில் 5 நிமிடம் தியானம்.
மனவெழுச்சியின் வளர்ச்சியிலே நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுவதற்கும், தலைவலி, உடல்வலியைப் போக்குவதற்கும், மன அழுத்தத்தை முற்றிலுமாகக் குறைப்பதற்கும் ஆஸ்திரேலிய ஹீலிங் தெரபி அளிக்கப்படுகிறது.
சுறுசுறுப்பை நெருப்பாக்கி, சோம்பலை சாம்பலாக்கிட அதிகாலையில் தினந்தோறும் மாணவர்கள் செய்யும் சூர்ய நமஸ்காரம் ‘8’ என்ற எண்ணை வரைந்து அதன் மேல் நடத்தல்.
4ம் தமிழ் பாடத்தில் உள்ளசெம்மொழியாம் பண்பாட்டு மொழிஎன்ற பாடத்தில் வரும் வில்லுப்பாட்டுக்குத் தேவையான உபகரணங்களான, வில், ஜால்ரா, ஜிங்கி, மண்பானை இவைகளை ஆசிரியர்களும், மாணவர்களும் கொண்டுவந்து வில்லுப்பாட்டினை அருமையாகப் பாடினார்கள்.மேலும் அறிவியல் சோதனைகளை முதல் நாளே நான் செய்து காண்பித்து அதை முகநூல் பார்த்து மாணவர்களை செய்யச் சொல்வேன். சில மாணவர்கள் உடனே செய்து விடுவார்கள். அவர்களை ஊக்குவிப்பதற்காக  வெற்றிக் கோப்பைகளை வழங்கி வருகின்றேன். மற்ற மாணவர்களுக்கும் பயிற்சிகளை அளிப்பேன். இளம் விஞ்ஞானியாக ஒவ்வொரு மாணவனையும் மாற்ற வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு.
முகநூல் - பார்த்து படித்ததில் எனக்கு உதவியவர்கள் பள்ளியின் முகநுல்பக்கத்தில் உறுப்பினராக உள்ள பள்ளியில் படிக்கு மாணவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெற்றோர்கள் டியூசன் ஆசிரியர்கள், மற்றும் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் மேலும் பள்ளியின் முகநுலில் உறுப்பினராக உள்ள உள்ள பெற்றோர்கள் 15 பேரும், உறவினர்கள் 20 பேரும், நண்பர்கள் 20 பேரும் மற்றும் வெளிநாட்டு பெற்றோர்கள் சவுதி, துபாய், மொரிசியஸ் பெற்றோர்கள் 8 பேரும் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். வெளிநாட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தினந்தோறும் படிக்கும் படிப்பை புகைப்படத்துடன் முகநூலில் பார்ப்பதால் தங்கள் குழந்தையை பிரிந்திருக்கின்றோம் என்ற ஏக்கம் வெகுவாக குறைகிறது. தங்கள் குழந்தைகளின் படிப்பை பற்றிய கவலையும் அவர்களுக்கு இருக்காது. முக்கிய நோக்கமே தங்கள் குழந்தைகள் வீட்டிற்கு செல்வதற்குள் பள்ளி படித்த படிப்பு மற்றும் கற்றல் செயல்பாடுகளை புகைப்படத்துடன் அவர்களுக்கு அனுப்புவதே .தங்கள் குழந்தைகள் வீட்டிற்கு வந்தவுடன் பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளியில் படித்த படிப்பை மாணவர்கள் சொல்லமலே அறியமுடியும். மேலும் குழந்தைகளின் படிப்பை பற்றிய  கவலையும் அவர்களுக்கு இருக்காது.

மேலும் SMART CLASS மூலமாகவும் ONLINE மூலமாகவும் எங்கள் பள்ளியின் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக, தினமும் அகராதிச் சொற்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி அதை மாணவர்கள் முகநுல் பார்த்து மறுநாள் வழிபாட்டுக் கூட்டத்தில் அந்த வார்த்தைகளை மாணவர்கள் அழகாக வாசிக்கிறார்கள்.
                 முகநூல் மூலம் படித்த மாணவர்களுக்கு வெற்றிகோப்பை வழங்கப்படும் (ஆசிரியறின்றி கற்றல்).


20.02.2016 அன்று கடையநல்லூர் சரகத்தில் நடைபெற்ற குறுவளமைப்  பயிற்சியில் கலந்து கொண்டு வருகை புரிந்த ஆசிரியர்களுக்கு எம் பள்ளியின் மாணவர்களாகிய நந்தினி, மாலதி, மகாபிரியா, சூர்யா, மகதி ஆகியோர் ஹிலிங் செய்தனர் ஹீலிங்கின் தாக்கத்தை அந்த ஆசிரியர்களின் மத்தியில் பரிமாற்றம் செய்தபோது ஒரு ஆசிரியைக்கு தலைவலி இருந்தது. ஹீலிங் செய்த பின் இல்லை என்றும், மற்றொருவருக்கு உடல்வலி, கைகால்வலி சற்று குறைந்தது என்றும், மற்றும் சிலர் எனது மனம் மிகவும் இலகுவாக என்றும் மன அழுத்தம் குறைந்தது என்றும் கூறினர். 60 பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளே ஹீலிங் தெரபி கொடுத்தனர். மேலும் குறுவள மையத்தின் ஆசிரிய பயிற்றுநர்கள் திரு. செல்வன் மற்றும் திருமதி. இராஜேஸ்வரி அவர்களும் ஹீலிங் தெரபி பெற்றனர்.
ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்காவில்  உள்ள ஹீலிங் தெரபி முதன்முறையாக திருநாவுக்கரசு தொடக்கபள்ளியில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றது.

ஹீலிங் செய்தால் ஏற்படும் நன்மைகள் 
மன அழுத்தத்தை முற்றிலுமாக குறைத்தல், தலைவலி, உடல் வலியை குணமாக்குதல். புதிய உலகத்திற்கு சென்ற ஒரு அனுபவம் முகமலர்ச்சி, நல்ல தூக்கம் வருதல்.
எங்கள் வகுப்பு மாணவர்கள் அதிகாலையில் எழுந்து ‘8’ என்ற எண்ணின் மேல் நடத்தல், யோகா மற்றும் நமஸ்காரம் செய்து முடித்து சூப்பர்ப்ரெயின் யோகா இவைகளை செய்து முடித்து காலை 6.00 மணிக்கு மேல் பள்ளியின் பாடங்களை படித்து அம்மா, அப்பாவிடம் இரவு பாடச் சீட்டில் கையெழுத்தும் வாங்கி வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் மாணவர்களுக்குத்தங்க நாணயம்பரிசாக அளிக்கப்படுகிறது. பணவசதியின்றி பள்ளிப்படிப்பை பாதியிலே விட்ட எனது ஆருயிர் தந்தை திரு. சுப்பையா அவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் என்னிடம் படிக்கும் மாணவர்களைத் திறமையான, செயல்திறன் மிக்க மாணவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கடந்த 5 வருடங்களாக திறமையான மாணவர்களுக்கு தங்க நாணயம் அவரது சொந்த செலவிலேயே வழங்கியுள்ளார்.

மேலும் பள்ளியினை மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக உதவி செய்த பள்ளிக்குழு உறுப்பினர்கள் திரு. இர.நாகலிங்கம், திரு.இர.கணேஷ்ராம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் நாராயணன் பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.இரா.பாகிரதி, எனது தந்தையான  சுப்பையா மற்றும் அசத்து அரசுப்பள்ளியல் எங்கள் பள்ளியை இணைத்த திருமதி. உமா மகேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளி நிர்வாகி இரத்தின சாமி தொலைபேசி எண் : 9944243607
திருமதி. ரெங்கநாயகி அம்மா : 9940810855
பழனிக்குமார் இடைநிலை ஆசிரியர்: 9976804887


Print Friendly